சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவிட்ட விஜய், “அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் இந்த மரியாதை செலுத்தும் செயல், அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை… pic.twitter.com/gnRcUwec7r
— TVK Vijay (@TVKVijayHQ) December 6, 2025
“>
