ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில், உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளார்.

குவஹாட்டியில் மழை காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களமிறங்கிய வைபவ், பும்ராவின் அனுபவத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முதல் ஓவரிலேயே இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 14 ரன்களைக் குவித்தார்.

“>

 

பும்ரா மட்டுமின்றி ஷர்துல் தாக்கூர் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்துவீச்சையும் துவம்சம் செய்த அவர், வெறும் 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசி (278.57 ஸ்டிரைக் ரேட்) மும்பை இந்தியன்ஸ் அணியைத் திணறடித்தார்.

அரைசதம் அடிக்கும் முன் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தாலும், வைபவ்வின் இந்த அசாத்திய துணிச்சலும் சிக்ஸர் மழையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.