சூர்யா நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி படிப்பு செலவிற்கு உதவி செய்து வருகிறார். அகரம் மூலமாக  பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி மட்டும் இன்றி தன்னம்பிக்கை, திறமை, சமூகப் பொறுப்பாளர்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகளையும் செய்து கொடுத்து வருகிறார்.  ஏராளமான மாணவர்கள் இதன் மூலமாக பயனடைந்து வருகிறார்கள் . இந்நிலையில் தியாகராய நகரில் புதிதாக அமைந்துள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.

அதில், “2006ம் வருடம் ஒரு சிறிய அறையில் சின்ன விதையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. இதுவரைக்கும் 5 ஆயிரத்து மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துள்ளார்கள். தற்போது 2000 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் படிக்க வைக்க நீங்கள் கொடுக்கும் நன்கொடையால் கட்டப்பட்ட அலுவலகம் கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வருமானத்தின் மூலமாக கட்டப்பட்ட பில்டிங் தான் இது. நன்கொடையாக வரும் ஒவ்வொரு காசும் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று பேசி உள்ளார்.