தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் அங்கு சென்று இருந்த நிலையில் படப்பிடிப்பில் அஜித்தின் நண்பரும் கலை இயக்குனருமான மிலன் மாரடைப்பால் நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ஆறுதல் கூறிய அஜித் உடலை அஜர்பைஜான் நாட்டிலிருந்து இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். தயாரிப்பாளருடன் இணைந்து உடலைக் கொண்டு வருவதற்கான பணிகளை அவரே முன் நின்று செய்வதாக கூறப்படுகிறது.