சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையில் திடீரென ஒரு வயதான ஜோடியும் ஒரே இளைய ஜோடியும் கார்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் திடீரென தகராறு முற்றியது.

இதில் கோபமடைந்த அந்த வயதான பெண்மணி இளம் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் ஆக்ரோஷமாக அடித்து தாக்கினார். இதே போன்று அந்த முதியவரும் ஒரு இரும்பு கம்பியால் அந்த வாலிபரை அடித்து தாக்குகிறார். இதில் யார் மீது தவறு என்பது சரிவர தெரியாத நிலையில் வீடியோ மட்டும் வைரல் ஆகிறது. மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.