
தலைநகர் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கடந்த 2-ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 56 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். அப்போது அதே விமானத்தில் கேரளாவை சேர்ந்த டாக்டர் குருட்டுகுலம் என்பவர் சென்றுள்ளார். அவர் அந்த பெண்ணின் உடல் நிலையை உடனடியாக சோதித்தார். அவர் எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இன்றி அந்தப் பெண் தன் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு இதயத்துடிப்பை சோதித்தார்.
அதோடு எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையும் செய்தார். அப்போது அந்தப் பெண்ணுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக விமானத்தில் இருந்த மருந்து பொருட்களை வைத்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினார். இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோ என்ற பிறகு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த மருத்துவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.