காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 220க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் அமிர்தசரசில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விமானம் குலுங்கியது. நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார்.

ஆனால் அவசர கால பயன்பாட்டிற்கும் அந்நாட்டு வான்வெளியை உபயோகப்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதிக்கவில்லை. இதனால் மோசமான வானிலைக்கு மத்தியிலும் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.