
90 ஸ் காலகட்டத்தில் நிறைய வெற்றி படங்கள் வந்து நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், சிறந்த பாடல்கள் என அக்காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது. அப்படி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹீரோயின் ஆக பலம் கொண்டவர் தான் நடிகை ரம்பா. இவருடைய வெற்றிப்பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி, ஆங்கிலம் எனப் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி இருந்தார். இதற்கிடையில் இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளோடு வெளிநாட்டில் வசித்து வந்த ரம்பா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடிஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ராபர் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரம்பா, தயாரிப்பாளர் தாணு என பலரும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய தாணு, “ரம்பாவின் கணவர் 2000 கோடி சொத்துக்கு அதிபதி. அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கிறது” என்று பேசியுள்ளார்.