தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் அரசியலுக்கு வருவார் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் இவருடைய செயல்களில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக ம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகையும் பரிசம் கொடுத்து மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டார். தற்போதைய லியோ படத்தை முடித்த இவர் சமீபத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அணிந்து வந்த பச்சை சட்டை தற்போது பேசு பொருளாக இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் விஜய் அணிந்து வந்த சட்டை அவருடைய தாய் ஷோபா பரிசாக அளித்தது என்று தெரியவந்துள்ளது. விஜயின் அம்மா ஷோபா ஒரு கடையில் விஜய்க்கு பச்சை நிற சட்டையை வாங்கி இருந்தார். இதனை விஜய்க்கு கொடுக்கப் போவதாக கூறியிருந்த இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு இணையத்தை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.