
பிரபல டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் சகானாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஹிமா பிந்து. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்என்பதால் இவருக்கும் நடிப்பு எளிதில் வந்துவிட்டது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் கையில் தான் குழந்தையாக இருந்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் அதாவது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படமானது இவருடைய வீட்டின் பக்கத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளதாம். அப்போது விஜய் அங்கிளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ஹிமா பிந்து பேட்டி ஒன்றில் கூறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.