விஜய் தற்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். படம் அக்டோபர் மாதம் அல்லது 2026 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற  பாபி தியோல் விஜய் குறித்து சில விஷயங்களை கூறினார். அதாவது விஜய் ஸ்வீட் ஹார்ட் ஆக இருக்கிறார்.

மிகவும் எளிமையான தன்னடக்கமான மனிதர். அவரோடு வேலை செய்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதான மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தமிலில் கங்குவா, தெலுங்கு டாபு மகராஜா போன்ற பிறமொழி படங்களில் நடித்திருந்தாலும் அங்கு மொழியை தவிர வேறு எதுவுமே மாறவில்லை. கடந்த 30 வருடங்களாக ரசிகர்கள் எனக்காக நிற்கிறார்கள். எனது அப்பாவினால் எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.