
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்தார். முதல் படத்தில் இவருக்கு சற்று விமர்சனம் வந்த நிலையில் தற்போது முன்னாடி நடிகராக இருக்கிறார். சுமார் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார்.
தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. ரசிகர்கள் சென்று அந்த வீட்டின் வாசலில் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் பிரமாண்டமாக கட்டிய இந்த வீட்டின் மதிப்பு 80 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.