மதுரையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கு எதிரொலியாக தமிழிசை சவுந்தரராஜன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
“விஜய்யின் மாநாட்டை விட, நெல்லையில் நடைபெறவுள்ள பூத் கமிட்டி மாநாடு தான் தமிழக அரசியல் வட்டத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார். இதில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா நேரில் பங்கேற்கவுள்ளதைக் குறிப்பிட்ட தமிழிசை, “அவரது வருகை பாஜகவின் நிலையை தெளிவாக வலுப்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “விஜய் ஒரு பெரிய பிரபலமான நடிகர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவருடைய வெற்றியை இன்னும் அரசியல் நிலைகளில் நிரூபித்து காட்டவில்லை. ஆனால், அமித்ஷா அவர்கள் பல மாநிலங்களில் பாஜகவை வெற்றிக்கு கொண்டு வந்தவர். அதனால் யார் உண்மையில் மக்களை ஈர்க்கிறார்கள் என்பது தேர்தலில்தான் தெரிய வரும்” என்று கூறினார்
