தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த வகையில் நடிகை திரிஷாவும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதோடு ஒரு ஆங்கில பாடலையும் பதிவிட்டு இருந்தார்.

லியோ படப்பிடிப்பின்  போது நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் திரிஷா பற்றிய சர்ச்சைகள் சமூக வலைதளத்தில் எழும் நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் சேர்ந்து ஆதி, கில்லி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய 5 படங்களில் நடித்துள்ளனர். மேலும் திரிஷா வெளியிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.