ராஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் உள்ள ஆபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்றுவரும்நிலையில்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைந்து மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில்  பதிவு செய்துள்ளார்.

“நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய வேண்டுமென ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இதையடுத்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.