இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் முழுவதும் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் இன்றும் ஐசியூவில் இருக்கிறார். இருப்பினும் அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட முழு சிகிச்சை குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இதயத்தில் இருந்து ரத்தத்தத்தை பிற உடல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயத்தில் பிரச்சனையை சரி செய்ய ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரத்தநாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். மேலும் இந்த சிகிச்சையை திட்டமிட்டபடி அப்போலோ ஹாஸ்பிடல் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதனால் தற்போது ரஜினி நலமுடன் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார்.