தமிழ் சினிமாவின் பிரபலமான  காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நடித்த பல படங்கள் மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில்  நடித்து வருகிறார்.  இவர் பூமர் அங்கிள்,  சட்னி சாம்பார் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வரும்  நிலையில், தற்போது ‘போட்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் ஆகும். மேலும் இந்த படத்தை இயக்குனர் தேவன் இயக்கியுள்ளார். இதில் எம்.எஸ் பாஸ்கர், சிசின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்  வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டீசர்  நல்ல  வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது படக்குழுவினர் படத்தின் டிரைலர்
விடியோவை வெளியிட்டுள்ளனர். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.