
நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டது நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை வெளியிட்ட நிலையில் தனுஷ் இதுவரை அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மீது தற்போது பாடகி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஏற்கனவே தனுஷ் மற்றும் தன் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோருக்கு எதிராக சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனுஷ் பற்றி சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், தனுஷ் பற்றி நயன்தாரா குறிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். குறைந்தபட்சம் உண்மையை பேசுவதற்கு நயன்தாராவிடம் இருந்து தைரியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடிகர் தனுஷ் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தொழில் ரீதியாக மட்டுமின்றி பாலியல் ரீதியாக கூட துன்புறுத்துவார். அம்மா வயசு நடிகைகளை கூட அவர் விடமாட்டார். அவருக்கு யாராவது ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு தொழில் ரீதியாக பிரச்சனை கொடுப்பதோடு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுப்பார். அதோடு அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் செய்வார். அவர்தான் நடித்த முதல் படத்தின் கதாநாயகி முதல் 50-வது படத்தில் நடித்த நடிகைகள் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு படத்திற்கு 3 பெண்கள் என்று வைத்துக் கொண்டால் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவன் ஒரு சைக்கோ என்பதால் பழிவாங்க பல வழிகளை யோசித்து வைத்திருப்பான் என்று கூறினார்.