தெலுங்கு சினிமா பிரபல நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ராக்கி பண்டிகையை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் சிரஞ்சீவி விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை கையில் அணிந்துள்ளார். இந்த கடிகாரத்தின் விலையை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிரஞ்சீவி அணிந்திருக்கும் கைகடிகாரம் ரோலக்ஸ் இன் காஸ்மோகிராபி டெடோனா ஒயிட் டைகர் ஆகும். இதன் விலை சுமார் 2.35 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 கோடி ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த கைகடிகாரம் அணிந்திருப்பதை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.