தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ‌ நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதால் தக் லைப் திரைப்படத்தின் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகர் சிம்பு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கொரோனா குமார் படத்தில் நடிக்கவில்லை.

இதனால் அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தக் லைப் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கோகுல் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில் அதற்கான அட்வான்ஸ் பணத்தை பெற்றுக்கொண்டு ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐசரி கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.