
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சரத்குமார், மஞ்சு வாரியர் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நாடிக்கிறார்கள்.
இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் டீசர் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் தியாகம் போன்றவற்றை காட்டுகிறது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.