
தெலுங்கு சினிமாவை ஒரு மெகா குடும்பமானது ஆண்டு வருகிறது. முன்னணி நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தாலே டாப் 10 இடத்தில் மெகா குடும்பம் தான் வரும். அப்படி அதிக அளவு நட்சத்திர பட்டாளம் கொண்ட இந்த மெகா குடும்பத்தில் தற்போது ஏதோ பிரச்சனை உண்டானது போல் தெரிகிறது. அதாவது இதற்கு காரணம் என்னவென்றால் உறவினர்களாக இருந்து சக நடிகர்களாக வலம் வரும் இரண்டு நடிகர்கள் இன்ஸ்டாவில் அன்-பாலோ செய்துள்ளார்கள்.
சமீபத்தில் இந்த இரண்டு நடிகர்களின் நடிப்பில் புதிய படங்களானது வெளியாகி இருந்தது. அவர்கள் யார் என்றால், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன்தான். நடிகர் ராம்சரண் அல்லு அர்ஜுனன் இன்ஸ்டா பக்கத்தில் unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது .இந்த விஷயம் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாகி உலகளவில் சாதனை படைத்தது. ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.