
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் தற்போது வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், மாயாதேவி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துடன் நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் செய்யாத ஒரு கொலைக்காக நடிகர் அருண் விஜய் கைது செய்யப்படும் நிலையில் அவர் எப்படி அந்த வழக்கிலிருந்து தன்னை நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருகிறார் என்பது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.