இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் கடன் பெறுகின்றன. அதன்படி 2021-22 ,  2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தச் சந்தைக் கடனாக ரூ.87ஆயிரம் கோடி இருந்தது. தற்போது 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன் ரூ.1 லட்சத்து 13ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அதிக கடன் பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.