தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கம் விலை, ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே நகை பிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது. கடந்த ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை, ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேளையுமே கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960 என்ற உச்சத்தைத் தொட்டது. இந்தத் தொடர் விலையேற்றத்தால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் சற்றே அதிர்ச்சியடைந்திருந்தனர்.

​ஆனால், இந்த விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து மீண்டும் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.89,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.