தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில் 700 க்கும் மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கும். அதன்பிறகு 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்து வழங்கப்படுவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் பாஜகவினர் பாரத பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தை காப்பியடித்து தான் முதல்வர் மருந்தகங்களை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் மீம்ஸ் பதிவை வெளியிட்டு நகல் என்றுமே அசல் ஆக முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.