இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவர்களது தந்தை யோக்யராஜ் சிங்க். தனது மகன் யுவ்ராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்.எஸ்.தோனி கெடுத்துவிட்டதாகவும், தோனியை தான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

யுவ்ராஜ் சிங், இந்திய அணிக்காக மேலும் 5 ஆண்டுகள் வரை விளையாடியிருப்பார் என கம்பீர், சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் கூறியுள்ளதையும் நினைவுபடுத்தியுள்ள யோக்ராஜ் சிங், தோனியின் தலைமையின் கீழ் யுவ்ராஜ் சிங்கின் வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாகவும், இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் இடையேயான உறவு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வந்த நிலையில் யுவராஜ் சிங்க் தந்தை கருத்து, இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.