இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர் வான்வெளி தாக்குதலால் காசா முற்றிலுமாக தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுள்ளது. அதாவது காசாவின் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் இணைய சேவை செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டு வெளி உலகத் தொடர்பில்லாமல் உள்ளனர்.