
சீன நாட்டில் உள்ள குவாங் டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஜோவு நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து கீழே சரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி முன்பு 24 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி விபத்தில் சிக்கி 48 பேர் பரிதாபமாக உயிரிழுந்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.