மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் உமர் லுலு. இவர் ஒரு அடார் லவ், ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், தமாகா மற்றும் பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் உமர் லுலு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பிரபல நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உமர் லுலு இயக்கியுள்ள ஒரு படத்தில் நடித்துள்ள அந்த நடிகை பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி நெடும்பச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களாக தொடர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தன் புகாரில் கூறியுள்ளார். மேலும் இளம் நடிகை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் லுலு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.