
நாட்டில் கொரோனா காலத்திற்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மாரடைப்பால் உயிரழக்கும் சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலை இது தொடர்பான செய்திகள் கூட அடிக்கடி வெளியாகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மஞ்செரியல் மாவட்டத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அந்த சிறுமி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரம் மாரடைப்பால் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.