சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவ்வபோது தைவானை சுற்றியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தைவானின் துணை அதிபர் வில்லியம் லாய் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

தைவான் தீவை சுற்றி இருக்கும் கடற்பரப்பில் சீன அரசு ராணுவ பயிற்சிகளை அதிரடியாக துவங்கியுள்ளது. இது குறித்து சீன ராணுவ செய்தி தொடர்பாளர் ஷியி கூறும்போது தைவானின் துணை அதிபர் லாய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார். பிராந்தியத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் ஒருவர் தைவானுக்கு வந்ததால் சீனா போர் பயிற்சியை மேற்கொண்டது. தற்போது தைவான் துணை அதிபர் அமெரிக்காவுக்கு சென்றதால் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.