
வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்த பட்டார். அவர் கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டும் தான் எம்பியாக நீடிக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இன்று காலை முதல் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலில் வயநாடு தொகுதியில் தொடர்ந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் பிரியங்கா காந்தி 5,64,515 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில் துல்லியமாகவும் தைரியமாகவும், தெளிவாகவும், ஆணித்தனமாகவும் பேசக்கூடிய பெண்மணி பிரியங்கா காந்தி. அவர் எதிர்க்கட்சி வரிசையில் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.