
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் 100 கிராம் எடைஅதிகமாக இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒலிம்பிக் கூட்டமைப்பு விக்னேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது மிகவும் வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது என்று கூறிய இருந்தது.
இதனைத் தொடர்ந்து வினேஷ் போகத்துக்கு பலரும் தைரியம் கூறிவரும் நிலையில் நடிகை நயன்தாரா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், நீங்கள் பலரை ஊக்கமடைய செய்துள்ளீர்கள். உங்களுடைய தரம் வெற்றிகளால் மதிப்பிடப்படுவதில்லை. நீங்கள் சிறப்பானதொரு பரிசையும் ஆழமான அன்பையும் பெற்றுள்ளீர்கள், அது எந்த சாதனையும் கடந்து நிற்கும், தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.