மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏர்டெல் அதிக பயனடையும் என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு தற்போது ரூ.208 ஆக உள்ளது, இது 27ஆம் நிதியாண்டில் ரூ.286 ஆக உயரும்.