
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன். இவர் தமிழ் உட்பட தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழி சினிமாவிலும் முன்னணி நடிகராக திகழும் நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. குறிப்பாக சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த படம் வருகிற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர் திடீரென தேம்பி தேம்பி அழுதுள்ளார். இதை கவனித்த துல்கர் சல்மான் அந்த ரசிகையை அழைத்து அழுததற்கான காரணத்தை கேட்டார். அப்போது செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அழுததாக அந்த ரசிகை கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் அந்த ரசிகையுடன் சேர்ந்த புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
