அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக வருகிற 7-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் முன்னால் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.