
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகள் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த வருடமும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.