
உத்தரகாண்டில் 38 வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டு போட்டிக்கு ஒரு மைனர் சிறுமி தயாராகி வந்தார். இந்த சிறுமி ஹாக்கி வீராங்கனை. இவரை பயிற்சியாளர் பலாத்காரம் செய்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் பானு அகர்வால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பானு அகர்வாலை கைது செய்தனர்.
அதாவது பயிற்சி இறுதி நாளில் ஒரு ஹோட்டலில் அனைவரும் தங்கி இருந்த நிலையில் கிட்டத்தட்ட 30 மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது அந்த மாணவியை மட்டும் பயிற்சியாளர் தனியாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.