
மத்தியப்பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி மனோஹர் தாக்கட், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு பெண்ணுடன் ‘ உடலுறவு கொண்ட’ ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 13-ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியாகிய பிறகு, பான்புரா போலீசார் தாக்கட் மற்றும் அந்தப் பெண்ணின் மீது மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீடியோவில், மனோஹர் தாக்கட் ஒருவர் வெள்ளை பாலேனோ காரிலிருந்து வெளியே வருவது மற்றும் அந்த காரில் மற்றொரு இளம்பெண் நிர்வாணமாக இருப்பது தெரிகிறது. இது 8 வழிச்சாலையில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டதாகவும், வீடியோ வெளியான பிறகு தாக்கட்டின் மொபைல் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவரை கட்சி பதவியில் இருந்து தாக்கட் மகாசபா யூத் அசோசியேஷன் நீக்கியுள்ளது. இதேபோன்று பாஜகவில் இருந்தும் அவரை நீக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை ரத்லாம் மண்டல டிஐஜி மனோஜ்குமார் சிங் கடுமையாக கண்டித்து, “பொது இடத்தில் இப்படியான ஆபாச செயல் வெட்கக்கேடானது. இது புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது சமூக கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடியது” என்று தெரிவித்தார். மனோஹர் தாக்கட்டின் மனைவி, மண்ட்சோர் மாவட்டத்தின் பானி கிராம வார்டு எண் 8-இல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றி வருகிறார். மேலும் சாலையில் வைத்து நிர்வாணமாக இருக்கும் பெண்ணுடன் அவர் உடலுறவு கொண்ட வீடிய சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகின்றது.
घिनौने बलात्कारी जनता पार्टी (BJP) वाले अब तो हाईवे पर भी ये खुलेआम शुरू हो जाता है…
जागो देशवासियों जागो… और अपनी बहन बेटियों को दरिंदे संघी भाजपाइयों से बचाओ..धर्म नहीं तुम्हारे बहन बेटी खतरे में है,वो भी इन्हीं दरिंदे भाजपाइयों से@JM_Scindia#ManoharLalDhakad #मनोहर_लाल https://t.co/Yx70spXe6o pic.twitter.com/rQ5eWUFHKw
— Ashish Yadav (@ashishyadavi) May 23, 2025