
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் அவருக்கு குரூப்-1 அரசு பணி மற்றும் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவில் நிலம் போன்றவைகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று தெலுங்கானா மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளராக முகமது சிராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.