தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதுடன், தமிழர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள், வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதே போல் குஜராத்தில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்ட போதும், தமிழர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.