இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் பணியிடங்கள் 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இறுதி சட்டத்தில் உள்ளதாகவும் அதில் 50 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.