
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினியாக நடித்த இவர் காபி வித் காதல், FIR உள்ளிட்ட பல படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ரைசா தெருவில் இருந்த பூனை ஒன்றுடன் விளையாடியுள்ளார். அப்போது சட்டென அந்த பூனை அவரை கடித்துவிட்ட நிலையில் கையில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்குச் சென்று ரைசா சிகிச்சை பெற்றுள்ளார். அந்த புகைப்படங்களை கண்ணீருடன் அவர் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அது வைரல் ஆகி வருகிறது.



