ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா முதல்வராக இருக்கிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகளை தெரு மாடுகள் என்று சொல்லக்கூடாது. அதற்கு பதிலாக ஆதரவற்ற மாடுகள் என்றுதான் அழைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தின் போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோ ரா ராம் குமார் இந்த மாற்றத்தை முன்மொழிந்தார்.

இப்போது அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து அமைச்சர் கூறியதாவது, பசுக்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பாஜக அரசு செயல்படுகிறது. பசு மாடுகளின் நலனுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் முதல்வர் கால்நடை மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்படும். ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு பசுக்களை நலனுக்காக கணிசமான எதையும் செய்யாமல் அவைகளின் நிலையை பற்றி உதட்டளவில் பேசுகிறது என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடதக்கதாகும்