திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி, பூவரசு உள்ளிட்ட மரங்களுடைய விதைகள் அடைக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. இந்த பால்காயின்களை பயன்படுத்திவிட்டு தூக்கி இருந்தாலும் இந்த காகிதம் மண்ணோடு மக்கி அதிலுள்ள விதைகள் முளைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த பேனாக்களை திருமணம் பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களுக்கு பரிசு பொருட்களாக வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். 5 முதல் 10 ரூபாய் வரை இந்த பேனாக்கள் விற்பனை செய்யப்படுகிறது. அனைவரும் வாங்கி செல்லும் விதமாக தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல் இயற்கை வளத்தை அதிகரிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்