
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி கொண்டு வருகிறது . அந்த வகையில் துபாயில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இந்திய குடும்பத்தினர் தங்கி உள்ளனர். அப்பொழுது துணிகளை துவைத்து துபாயில் தங்கி இருந்த அந்த ஹோட்டல் பால்கனியில் அந்தப் பெண் துணியை காயப் போடுகிறார். இந்த வீடியோவை அவருடைய மகன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பாம் அட்லாண்டிஸ் விடுதியில் அம்மா தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்கிறார் என்று தலைப்பிட்டுள்ளார் .இதை பார்த்த ஹோட்டல் நிர்வாகத்தினர், உங்களுடைய அம்மா தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்கிறார் .ஆனால் ஒவ்வொரு குளியல் அறையிலும் துணிகளை காய வைக்க தனியாக நாங்கள் ஒரு கருவியைப் பொருத்தி உள்ளோம் .அதில் நீங்கள் உங்கள் துணியை காய வைக்கலாம் என்று பதிலடி கொடுத்துள்ளனர். சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் மற்றும் சிலர் அந்த பெண்ணுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram