திருச்சியை சேர்ந்த அஜய் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பைக்கில் சாகசம் செய்து கொண்டே பட்டாசு வெடித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி வைரலான நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பெயரை வைத்து விசாரணை செய்த போலீசார் Devil Rider இன்ஸ்டாகிராம் உரிமையாளர் அஜயை கைது செய்துள்ளனர். அந்தக் காணொளி காவல்துறையினரை மட்டுமல்லாது பார்க்கும் யாவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாகவே அமைந்துள்ளது.