தீபாவளி பண்டிகையின் போது பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் ஆணுறையை வழங்கியது தற்போது இணையத்தில் விவாத பொருளாக ‌ மாறி உள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையின் போது பொதுவாக கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு, பொருள் மற்றும் உடை போன்றவற்றை வழங்கலாம்.

ஆனால் அந்த மருத்துவர் காண்டமை பரிசாக கொடுத்ததோடு சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இதைக் கொடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பின்னர் அந்த டாக்டர் பதிவை நீக்கிவிட்டார்.