
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டில் நடைபெற்றது. நடிகர் விஜய் அரசியல் கொள்கைகள், அரசியல் முன்னோடிகள் ,கொடி விளக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கங்கள் என பல விஷயங்கள் பற்றி பேசினார். அரசியல் கட்சிகளை விமர்சித்து விஜய் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சோசியல் மீடியாவில் பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, திமுக கூடி கலைகின்ற மேக கூட்டம் இல்லை. கொள்கை சார்ந்த கூட்டம். எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.